Translate

திங்கள், 21 ஜனவரி, 2013

விலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி?


  அதி நவீன பட்டு இன்றைய பெண்களுக்காக

பண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை.
அது காஞ்சிபுரம்,ஆரணி, பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன.
பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.

ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்

1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.
2. விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் "ஃபால்" தைத்து அணியவும். ஃபாலைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.
3. அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.
4. சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.
5. விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட "ஓடோனில்"லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.
6. ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.
7. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.
8. அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.
9. விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.

மேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.




பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம்.

பண்டிகை சீசன். பட்டுப் புடவை கட்ட வாய்ப்பு அதிகம் இருக்கும். உடுத்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்…

* பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.

* துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது.

* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.

* புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசியம். முதலில் துவைக்கும் போது, சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியைத் தனியாகவும் அலச வேண்டும்.

* பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே மேல்.

* பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலிதின் கவர்களில் வைப்பது நல்லதல்ல; துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.

* பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளை, பட்டுப் புடவை களின் மேல் போட்டு வைக்கக் கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு காரணமாக அமைகிறது.

* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.

* ஒரு படி தண்ணீரில், ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து, பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால், சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.

* பட்டுப் புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

கீதாச்சாரம்


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
- பகவான் கிருஷ்ணர்

A.BALAMURUGAN KAMAKKUR

சனி, 19 ஜனவரி, 2013

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR 6380482695







கம்யூட்டரில் மணிக்கணக்கில் செலவு செய்யும் மகனோ, மகளோ இருக்கின்றனரா?
அப்படி எனில் உங்கள் குழந்தைகள் படிப்பிற்காக அதிகம் மெனக்கெடுகின்றனர்
என்று பெருமை பட்டுக்கொள்ளவேண்டாம். அவர்கள் பேஸ்புக், ட்விட்டர்,
யுடியூப்,என சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கியிருக்கக் கூடும் என்று
எச்சரிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்

‘லைக்­’ எதிர்பார்ப்பு

கல்லூரி
செல்லும் மாணவர்களும், ஐடி துறையில் இருப்பவர்களும் சமூக வலைத்தளங்களை
அதிகம் பயன்படுத்திய காலம் போய் இன்றைக்கு லட்சக்கணக்கானோர் சமூக
வலைத்தளங்களை பயன்படுத்தியும், பார்வையிட்டும் வருகின்றனர். மழை பெய்தால்
ஸ்டேட்டஸ், தும்மினால் ஸ்டேட்டஸ் என அப்டேட் செய்து அதற்கு லைக் கேட்டு
காத்திருக்கும் காலம் வந்துவிட்டது. அதிகம் ‘லைக் கிடைத்தால்
மகிழ்ச்சியும், யாருமே ‘லைக் போடாவிட்டால் மனஅழுத்தமும் ஏற்படுகிறது
இவர்களுக்கு. ஆர்வத்தில் தொடங்கிய இந்த பழக்கம் படிப்படியாக இதிலிருந்து
மீளவே முடியாத அளவிற்கு வலைத்தளங்களின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.
இதனால் பெற்றோர்களுடனான பேச்சு குறைவதோடு, படிப்பும் பாழாகி விடுகிறது
என்கின்றனர் நிபுணர்கள்

ஃபேஸ் புக் அடிமை

மணிக்கணக்கில்
கம்ப்யூட்டர் முன்பு அடிமையாகக் கிடப்பது, எந்த நேரமும் வலைத்தள
யோசனையிலேயே இருப்பது, பிற வேலைகளை மறப்பது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும்
மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதன்காரணமாகவே சமூக
வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு புது ரகத்தினர் இன்றைக்கு
மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அணுகத் தொடங்கி இருக்கிறார்கள்...


கவனிக்கப்படவேண்டியவர்கள்

வதோதராவில்
எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் 8வது மற்றும் 10 வது படிக்கும் 200 மாணவர்கள்
பங்கேற்றனர். அவர்களில் ஃபேஸ் புக் தங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என்று 58
சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். தினசரி அப்டேட் செய்யாவிட்டால் எதையோ
இழந்தது போல நினைப்பதாக 27 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்கள்தான்
உண்மையான அடிமைகள். இவர்கள்தான் அதிகம் கவனிக்கப்படவேண்டியவர்கள்.


பிள்ளைகளை கவனிங்க

தமிழ்நாட்டிலும்
சமூக வலைத்தளங்களில் மூழ்கி படிப்பில் கவனம் சிதறும் பல மாணவ, மாணவிகள்
இருக்கின்றனர். சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் 500க்கும் மேற்பட்ட நண்பர்கள்
வரை இருக்கின்றனர். படிக்கிறேன் என்ற போர்வையில் தினமும் 3-4 மணி நேரம்
வரை சமூக வலைத்தளத்தில் மூழ்குவது, நண்பர்களுடன் சாட்டிங் என படிப்பை
பாழாக்கிக் கொள்கின்றனர்.


இதுவும் போதைதான்

மூளையில்
டோபோமைன் என்ற வேதிப்பொருள் சுரக்கும்போது ஒருவிதக் கிளர்ச்சி, சந்தோஷம்
உண்டாவதும் இது போன்ற வலைதள அடிமையாக காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மது,
புகை ஒருவித போதை என்றால் கணினி மற்றும் மொபைல் போன் போன்றவைகளிடம் இன்று
பலரும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள.


சமூக விரோதிகளின் கையில்

சமூகத்
தளங்கள் மூலமாகப் பள்ளி மாணவிகளைச் சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொள்ளும்
அபாயமும் இருக்கிறது. முகம் தெரியாத ஆட்களுடன் தான் யார், தனக்கு என்ன
சினிமா பிடிக்கும், எந்த மாதிரி உணவு பிடிக்காது என்று துவங்கி தங்களைப்
பற்றிய அத்தனை விஷயங்களையும் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்.
புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் கடைசியில் உணர்வு
ரீதியான உறவாகவும் மாறி ஓடிப்போக வழிவகுக்கிறது.


எரிச்சலும் மனஅழுத்தமும்

சமூக
வலைத்தளங்களில் பழியாய்க் கிடந்தால் படிப்பு, வேலை, குடும்பம் ஆகியவற்றின்
மீது கவனம் குறையும். கவனச்சிதறல் ஏற்படும். வாழ்க்கையில் எது முக்கியம்,
எது முக்கியம் இல்லை என்பது மறந்து போவதுடன் வாழ்க்கை முறையே மாறிவிடும்.
நிறைய லைக்ஸ் , ஷேர் கிடைக்கவில்லை என்றால் ஒருவித ஏமாற்றம் வந்து
மனஅழுத்தம் ஏற்படும். நம்முடைய கருத்துக்கு எதிரான கருத்து வந்தால், அதைத்
தாங்கும் பக்குவமற்று சிலருக்கு எரிச்சல் ஏற்படும். அதுவே மன அழுத்தமாகவும்
மாறும் என்கின்றனர் நிபுணர்கள்


உடல், மனநல பாதிப்பு

மனம்
மட்டும் அல்லாமல், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் இடுப்பு மற்றும்
கண் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும். படிப்பு அல்லது வேலையில் கவனம்
குறையும். எதையும் சகஜமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம். ஒரு
வார்த்தைக்கே ஒடிந்துபோகிறவர்கள் வலைத்தள ஆர்வத்தால் எத்தகைய
மனச்சிக்கலுக்கும் ஆளாக நேரிடும். சிலர் தற்கொலைக்கு முயலும் அபாயமும்
உருவாகும்.


கவனத்தை திருப்பலாம்

எனவே சமூக
வலைத்தளங்களுக்கு அடிமையானவர்களை மீட்க ஒரே தீர்வு... அத்தகைய ஆர்வத்தை
உடனடியாக நிறுத்துவதுதான். முதலில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், மூன்றே
வாரத்தில் அதில் இருந்து விடுபட்டு வழக்கமான பணிகளில் முன்போல ஈடுபட
முடியும். இதில் பெற்றோர் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி செல்லும்
மாணவ- மாணவிகளுக்குச் சமூக வலைத்தளங்களை அறிமுகம் செய்வதற்கு பதிலாக நல்ல
புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம். மேலும் பிற குழந்தைகளோடு சேர்ந்து
விளையாடுவது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றில்
சந்தோஷத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஒன்இந்தியா தமிழ்.

வியாழன், 17 ஜனவரி, 2013

செங்குந்தர் எனும் கைக்கோளர் - ஒரு பார்வை

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழகத்தில் உள்ள ஒரு இனம் செங்குந்தர் என்றழைக்கப்படும் கைக்கோளர். கைக்கோளர் எனும் பெயர் செங்குந்தர் என்ற பெயரோடு சேர்ந்து வழக்கத்தில் வர ஆரம்பித்தது சுமார் 1200 ஆண்டுகளாக. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், ஆற்காடு,ஆரணி,காமக்கூர்,தேவிகாபுரம், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், திருமழபாடி, தஞ்சை, சென்னை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகர்களாகவும் மற்ற தொழில்களிலும் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

"கூவிளம் இதழி தும்பை
கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

குறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் முருகனின் அம்சமான வீரபாகுத் தேவரின் வழிவந்தவர்கள். இதனாலோ என்னவோ வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற படைவீரர்களாக திகழ்ந்தனர். மூவேந்தர்களிடமும் மிகவும் நம்பிக்கைக்குரிய அந்தரங்க படைவீரர்களாய் இருந்த இவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தனர். ”வாள் தாங்கிய கைக்கோளர்” என்று கல்வெட்டுகளில் உள்ள செய்தியால் இவர்கள் ஈட்டி மட்டும் அல்ல வாள் பிடித்தும் போரிட வல்லர் என்று அறிகிறோம்.

செங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள் உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும் நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வனில் கல்கி கைக்கோளப்படை பற்றி எழுதியிருப்பதை சற்று பாருங்கள்,

"மூன்று கம்பீர புருசர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர்). அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.

"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஆம், ஐயா! ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."

"அது ஏன்?"

"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."

"உங்கள் படையில் எத்தனை கை? எத்தனை வீரர்கள்?"

"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும் இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."

"உங்களுடைய கோரிக்கை என்ன?"

"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்!"
"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."

"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...?"

"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."

"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்!..."

"ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்..."

"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."


அப்பப்பா! என்னவொரு அசாத்திய வீரம், சுந்தர சோழரின் மந்திரியான அநிருத்த பிரம்மராயர் சாதாரண ஆளில்லை, திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த இவர் சோழர்களின் சாணக்கியர், இவரின் செவியும், கண்ணும் சோழ நாடு முழுவதும், இவருக்கு தெரியாமல் சோழ நாட்டில் எதுவுமே நடக்காது அந்நாளில். இப்பேர்பட்ட ஒருவரே கைக்கோளப் படையை புகழ்கிறார் என்றால் அவர்களின் வீரம் எந்த அளவிற்கு சிறந்ததாயிருந்திருக்க வேண்டும்.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தங்கள் குலத்தொழிலாகிய படைத் தொழிலை விட்டு முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

18ஆம் நூற்றாண்டு முதலே இவர்கள் முதலி எனும் பெயரை தங்கள் பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டனர் என்பது அந்நாள் பாண்டிச்சேரியின் கவர்னருக்கு முதன்மை துபாஷியாய் இருந்த ஆனந்த ரங்கப் பிள்ளை அவர்களின் டைரி குறிப்பிலிருந்து தெரியவருகிறது.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை அளித்திருக்கின்றனர் என்றும் India before Europe by Catherine Ella Blanshard Asher, The Political Economy of Commerce: Southern India, 1500-1650, BySanjay Subrahmanyam, Textiles in Indian Ocean Societies, By Ruth Barnes ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமச் சோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் முதலிய மூன்று சோழர்களிடம் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக் கூத்தர் செங்குந்த இனத்தைச் சேர்ந்தவர்.

இரட்டைப் புலவர்கள் என்று பெயர் பெற்ற மதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர் இவர்களும் செங்குந்த மரபில் தோன்றியவர்கள். இவர்கள் பிறந்தது சோழநாட்டின் ஆமிலந்துறையில், இவர்களில் ஒருவர் குருடர் மற்றவர் முடவர், இருப்பினும் முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பல சிவாலயங்களுக்குச் சென்று பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் முதல் இரண்டு அடியை பாட மற்றவர் அடுத்த இரண்டடியை பாடி முடிப்பார். காளமேகப் புலவரின் நண்பர்களாய் இருந்த இவர்கள் அவருடைய மறைவின் போது, புலவரின் உடலை நெருப்பு தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.

'ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'
என முடவர் கதற, குருடர் உடனே,
'-பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.

அரசியலில் - அண்ணாதுரை, ஆன்மிகத்தில் - திருமுருக கிருபானந்த வாரியார், கவிதையில் ஒட்டக்கூத்தர், பாவேந்தர் பாரதிதாசன், விடுதலைப் போராட்டத்தில் - தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன் என அறிஞர்களும், கவிஞர்களும், தியாக செம்மல்களும் என கைக்கோளர் குலத்தில் உதித்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

72 உட்பிரிவுகளை கொண்ட கைக்கோளர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும், இலங்கையிலும் முடியாட்சி காலம் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாட்டு சிற்றரசர்களில் ஒரு பிரிவினரான கெட்டி முதலியார் கட்டிய தாரமங்கலம் கோவில் சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தை பற்றியும் கெட்டி முதலியார்களை பற்றியும் தனியொரு பதிவில் பார்ப்போம்.


(பி.கு : இந்த கட்டுரைக்கான குறிப்புகள் தஞ்சை நூலகத்தில் இருந்தும், இணையத்தில் (குறிப்பாக மரத்தடி, முத்தமிழ் மன்றம், தினமலர்) இருந்தும் எடுக்கப்பட்டது. இரட்டையர் பாடல் ஷைலஜா அவர்களின் கட்டுரையில் இருந்து எடுப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

Labels: kaikolar, muthaliyar, sengunthar, கைகோளர், கைக்கோளர், செங்குந்தம், செங்குந்தர், முதலியார்


காமக்கூர் கோவில் KAMAKKUR






அருள்மிகு சந்திரசேகரசாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
காமக்கூர் (காமத்தூர்)-606903,வேலூர்
குன்னத்தூரிலிருந்து 2கிமீ
=============================
 அமிர்தாம்பிகை உடனுறை இளம்பிரைநாதர் திருக்கோவில் (பிறைசூடியபெருமான் ), காமக்கூர் (ஆரணி படவேடு சாலை ) திருவண்ணாமலை மாவட்டம் - பாடல் பெற்ற  சிவத்தலம் - மூர்த்தி தீர்த்தம் தலவிருட்சம் உள்ளது - மிகப்பழமையான சிவாலயம்


திருப்புகழ் - பாடல் 988 - காமத்தூர்
**************************************************

ராகம் - ....; தாளம் -
****************************


தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் ...... தனதானா


ஆகத் தேதப் பாமற் சேரிக்
கார்கைத் தேறற் ...... கணையாலே

ஆலப் பாலைப் போலக் கோலத்
தாயக் காயப் ...... பிறையாலே

போகத் தேசற் றேதற் பாயற்
பூவிற் றீயிற் ...... கருகாதே

போதக் காதற் போகத் தாளைப்
பூரித் தாரப் ...... புணராயே

தோகைக் கேயுற் றேறித் தோயச்
சூர்கெட் டோடப் ...... பொரும்வேலா

சோதிக் காலைப் போதக் கூவத்
தூவற் சேவற் ...... கொடியோனே

பாகொத் தேசொற் பாகத் தாளைப்
பாரித் தார்நற் ...... குமரேசா

பாரிற் காமத் தூரிற் சீலப்
பாலத் தேவப் ...... பெருமாளே.


உடலிலே வந்து குறி தப்பாமல் தைக்கின்ற (மன்மதனுடைய) கையில் உள்ள கரும்பு வில்லினின்று புறப்படும் மது நிறைந்த மலர்ப் பாணங்களாலும், விஷம் கொண்டதாய், பால் போலும் வெண்மையானஅழகு வாய்ந்த வடிவம் உடைய நிலவாலும், புணர்ச்சி இன்பத்தில் ஆசைப்பட்டு, தன் படுக்கையில் நெருப்புப்பட்ட பூவைப்போலக் கருகிப் போகாமல், அவள் பிழைத்துப் போகும்படி, ஆசை வைத்துள்ள இன்பத்துக்கு இடமான (உனது) திருவடியில் (என் மகள்) மகிழ்ச்சி அடைய, நன்கு அவளைச் சேர்ந்து அருள மாட்டாயா? (இந்திரனாகிய) மயில் மேல் பொருந்தி ஏறி, கடல் நீரில் நின்ற சூரன் அழிந்து ஓடும்படி போர் செய்த வேலனே, சூரியன் காலையில் உதிக்கும்படிக் கூவுகின்ற, அந்த இறகு உடைய கோழிக் கொடியை உடையவனே, சர்க்கரைப் பாகுக்கு ஒத்த இனிமையான சொற்களின் பக்குவம் உடைய வள்ளியை விரும்பி உள்ளம் மகிழும் நல்ல குமரேசனே, இந்த உலகத்தில் காமத்தூர் என்னும் தலத்தில் தூய்மை கொண்ட குழந்தையாக அமர்ந்த தெய்வப் பெருமாளே.

இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

http://www.eegarai.net/t92047-abalamurugan-kamakkur
 
 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி எனும் சிற்றூரால் காமக்கூர் என்ற இடம் உள்ளது .இங்கு உள்ள ஒரு சிவன் ஆலயத்தின் பெயர் ஸ்ரே சந்திரசேகர ஸ்வாமி என்பது. அதில் மூலவருடன் உள்ளவள் அமிர்தாம்பிகை என்று கூறப்படுகிறாள். அதில் தேவி காமாஷியின் சன்னதியும் உள்ளது. இந்த ஆலயம் காமாஷியுடன் சம்மந்தப்பட்டு உள்ளதினால் அங்குள்ள நதியின் பெயர் காம நதி என்று இருந்துள்ளது. அந்த ஆலயத்து ஸ்தல புராணமும் காம நகர் புராணம் என்று தலைப்பிட்டுக் கொண்டு உள்ளது. ஆகவே காமத்தூர் மற்றும் காமக்கூர் என்ற இரண்டும் ஒன்றேதான் என்பது தெளிவாகிறது. இந்த புராதான ஆலயம் சோழர்கள் காலத்தை சேர்ந்தது. அதில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் ஒரு மயில் மீது அமர்ந்து கொண்டுள்ள காட்சியில் காணப்படும் ஷண்முகனுக்கு ஆறு முகம், மற்றும் பன்னிரண்டு கைகளும் உள்ளன. இதைப் போன்ற ஷண்முகன் தேவிகாபுரத்தில் உள்ள கனககிரி ஆலயத்திலும் காணப்படுகிறார். இந்த ஆலயக் குறிப்பும் திருப்புகழில் காணப்படுகிறது